அதிமுகவில் இணைய போகிறேன்…இசக்கி சுப்பையா அறிவிப்பு..!!

அமமுக கட்சியில் இருந்து விலகி இசக்கி சுப்பையா அதிமுகவில் இணையப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள்  தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக கூட  தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியிலிருந்து விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் இணைந்தது அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில் அமமுகவின் மற்றொரு முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையா அவர்கள் அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியது

Image result for இசக்கி சுப்பையா

இந்நிலையில்  இசக்கிசுப்பையா செய்தியாளர்களை சந்தித்த இசக்கி சுப்பையா ,சில மணி நேரங்களுக்கு முன்பு டிடிவி தினகரன் அவர்கள் அளித்த பேட்டி  எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிடிவி தினகரன் அடிக்கடி என்னை 48 நாள் மட்டுமே அமைச்சராக இருந்துள்ளேன் என்பதைச் சுட்டிக் காட்டி கிண்டல் செய்வார் இத்தகைய செயல் ஒரு தலைவருக்கு அழகல்ல. ஆகையால் தான் இந்த விலகல் முடிவை எடுத்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் தாய் கழகத்தில் முதல் அமைச்சராக பணியாற்றி வரக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நல்லாட்சி செய்து கொண்டிருக்கிறார். ஆகையால் எனது தொண்டர்களுடன் மீண்டும் தாய் களத்தில் இணைய விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.