நயன்தாராவின் கேரக்டர் இதுவா ? … வைரலாகும் போஸ்டர் ..!!

லவ் ஆக்சன் டிராமா படத்தில் நயன்தாரா ஷோபா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் .

தமிழகத்தின் தனக்கென தனி கால்தடம் பதித்த நடிகைகளில் ஒருவரான நயன்தாரா நடித்த “கொலையுதிர் காலம்” திரைப்படம் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில் நிவின் பாலியுடன் நயன்தாரா நடித்து வரும் லவ் ஆக்சன் ட்ராமா   படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

மேலும் , இப்படம் வரும் ஓணம் அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. தற்சமயம் இந்த படத்தில் நயன்தாரா கேரக்டர் குறித்த போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நயன்தாரா ஷோபா என்ற வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். மேலும், இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி  பரவி வருகிறது.