
ஒரு விசித்திரமான சம்பவத்தில் இண்டிகோ விமானத்தில் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும் போது சில ஆண்கள் நடுவில் நடந்து வந்து டிஸ்போசல் கப்பில் பயணிகளுக்கு தேநீர் கொடுக்கின்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இவர்கள் ரயிலில் டீ, காபி விற்பவர்கள் போல உடை அணிந்து இருந்தனர். அவர்களில் ஒருவர் அமர்ந்திருந்த பெண்ணுக்கு பாட்டிலில் இருந்த டீயை பரிமாறினார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் வருகின்றனர்.
விதிகளுக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இண்டிகோ சமீபத்தில் இந்த ஆண்டு உலகின் மோசமான விமான நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஏர் ஹெல்பின் 2024 மதிப்பெண் அறிக்கையில் உள்நாட்டு விமான நிறுவனங்கள் அட்டவணையில் கீழே இருந்தன. பகுப்பாய்வு செய்யப்பட்ட 109 நிறுவனங்களில், 103 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த அறிக்கையில் ஏர் இந்தியாவை 61-வது இடத்திலும், ஏர் ஏசியாவை 94-வது இடத்திலும் உள்ளது.
View this post on Instagram