கவிழ்கிறதா கர்நாடக அரசு ? 11 MLA_க்கள் சபாநாயகருடன் சந்திப்பு …!!

கர்நாடகாவில் 11 MLA_க்கள் சபாநாயகரை சந்திக்க இருப்பது அரசியலில் தீடிர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இறுதியாக நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் தனி கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றது. மாநிலத்தின் முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி இருந்து வருகின்றார். இந்த ஆட்சி காங்கிரஸ் கட்சியில் 80 இடங்கள் , மதசார்பற்ற ஜனதா தளத்தின் 37 இடங்கள் என மொத்தம் 117 இடங்கள் என நீடித்து வருகின்றது.

குமாரசாமி , காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் க்கான பட முடிவு

குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைந்தது முதல் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே தொடர்ந்து மோதல்கள் இருந்து வருகின்றன. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்து ஆட்சியை கலைக்க தொடர்ந்து பாஜக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கூட்டணியில் உள்ள அதிருப்தி MLA_க்களை தாங்கள் பக்கம் இழுக்க பாஜக வியூகங்கள் வகுத்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாதத்தில் கர்நாடக மாநில அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டதில் காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் ஜார்கிகோளி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த இவர் தனது ஆதரவு MLA_க்களுடன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியது.

குமாரசாமி , காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் க்கான பட முடிவு

இந்நிலையில் தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளமிடையே ஒருங்கிணைப்பின்மைல்லை என்றும் கருத்து மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வந்தது தெளிவாக தெரிந்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பாஜக போட்டியிட்ட 25 தொகுதியில் 23_இல் வெற்றி பெற்றது.மேலும் மக்களவையுடன் சேர்ந்து  சிஞ்சோலி, குந்துகோல் என்ற இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சிஞ்சோலி தொகுதியில் பாஜகவும் , குந்துகோலில் காங்கிரசும் வெற்றி பெற்றது.

தொடர்புடைய படம்

இதனால் கர்நாடக மாநில சட்டசபையில் பாஜகவின்  MLA_க்கள்  எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின்  பலம் 79 ஆக குறைந்துள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் பலம் 37_ஆக இருக்கின்றது. பகுஜன்சமாஜ் கட்சிக்கு 1 உறுப்பினரும், 2 சுயேச்சை உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இதில் 2 சுயேச்சை MLA_க்கள்  பாரதீய ஜனதாவுக்கு தங்களது ஆதரவை  தெரிவித்துள்ளனர். இதனால் சட்டசபையில் பாஜகவின் 107 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க இன்னும் 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை படுகின்றது.

குமாரசாமி , காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் க்கான பட முடிவு

ஏற்கனவே மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் கர்நாடகா_வில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேசப்பட்ட சூழலில் தற்போது பாஜக அதற்கான வேளையில் இறங்கியதாக கூறப்படுகின்றது. அங்குள்ள  அதிருப்தி MLA_க்களை எப்படியாவது தம் பக்கம் இழுத்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம்  கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் முழு வேகத்தில் இறங்கியுள்ளதால் எப்போது வேண்டுமானாலும் கர்நாடக அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ள நிலையில்  காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்திக்க வருகை சபாநாயகரை சந்தித்து இராஜினாமா கடிதம் அளிக்க உள்ளதாக தகவல் இதனால் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.