முட்டையால் இவ்வளவு நன்மையா ..!!!

சைவ உணவுப் பிரியர்களும் விரும்பும்  முட்டையில் காணப்படும் சத்துக்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம் .

புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். முட்டையில்  உள்ள புரதச்சத்தானது செல்களின் உற்பத்திக்கு துணைபுரிவதுடன் ,செல்களின் மறுவளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது . இதனை உண்ணும் போது பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்கப்படும் .அதேபோல் தோலுக்குத் தேவையான விட்டமின் ‘ஈ’ மற்றும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ஆதாரமான இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் துத்தநாகம் போன்றவையும் முட்டையில் கொட்டிகிடக்கின்றன .

egg க்கான பட முடிவு

முட்டையை உட்கொள்ளும்போது ,ஆரோக்கியமான உடல்எடை இழப்பினைப் பெறமுடியும். முட்டையில் உள்ள சோலைன் அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது. இவை கண்ணின்           ரெட்டினா  உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.தோலுக்குத் தேவையான விட்டமின் ‘ஈ’  இதில் நிறைந்துள்ளன . ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ஆதாரமான இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் துத்தநாகம் போன்றவையும்  உள்ளன.

egg க்கான பட முடிவு

முட்டையை உண்ணும்போது கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் தடுக்கலாம். முட்டையில் உள்ள விட்டமின்கள், தாதுஉப்புக்கள், அமினோ அமிலங்கள் சருமம் மற்றும் கேசத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான விட்டமின், ‘டி’ முட்டையில் உள்ளது.