3_ஆவது அணி தானா..? “சந்திரசேகர் ராவ்-முக.ஸ்டாலினுடன் சந்திப்பு” தேசியளவிலான விவாதம்…!!

திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருவது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகின்றார்.

3_ஆவது அணியை அமைக்கும் முயற்சியை முன்னெடுத்து வரும் சந்திரசேகர் ராவ் பல்வேறு மாநிலங்களின் பிரதான கட்சிகளின்  முதல்வர்களை சந்தித்து வருகின்றார். கடந்த வாரம் கேரள மாநில முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த அவர் இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள முக.ஸ்டாலின் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

இதில் திமுக_வின் TR.பாலு , துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ள சூழலில் தேசிய அரசியலின் மாற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் விவாதமாக மாறியுள்ளது. ஸ்டாலின் சந்திப்பை முடித்து  சந்திரசேகர் ராவ் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகிள்ளது. காங்கிரஸ் கூட்டணி மற்றும் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் கட்சியினரை சந்திரசேகர் ராவ் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.