சீன் காட்ட போறாரா..? ”விமர்சிக்க ஒரு மணி நேரமானது” ஸ்டாலின் அதிரடி ..!!

அமெரிக்கா செல்லும் முதல்வரை விமர்சிக்க ஒரு மணி நேரம் ஆகாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்களை ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , முதலமைச்சர் தகுதிக்கு மீறி பேசி இருக்கிறார். நான் சீன் காட்ட போனேன் , விளம்பரத்துக்காக போனேன் என்று சொல்லியுள்ளார்.

Image result for stalin edappadi palanisamy

இப்போது முதல்வர் அமெரிக்காவுக்கும் , லண்டனுக்கும் முதல்வர்  போறதா ஒரு செய்தி வந்துருக்கு. லண்டனுக்கும், அமெரிக்காவுக்கும் சீன் காட்ட தான் போறாரா? என்று  சொல்றதுக்கு ஒரு மணி நேரம் ஆகாது. தமிழக முதல்வரை நான் விமர்சிக்க நீண்ட நேரம் ஆகாது. பொறுப்புள்ள இடத்தில் இருந்து கொண்டு , பதவியை மறந்து கீழ்த்தனமாக நான் பேச மாட்டேன்.மேலும் கோவைக்கு சென்ற முதலமைச்சர் நீலகிரிக்கு ஏன் செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும் என தெரிவித்தார்.