சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா..??

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்திக்கு சிவகார்த்திகேயன் கதாநாயகனாக தேர்வு  செய்யபட்டு படத்தின் பணிகள் தொடங்கி வருகின்றன. தற்போது கதாநாயகியை தேர்வு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Image result for ராஷ்மிகா மந்தானா

இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அனைவரின் கவனம் பெற்ற ராஷ்மிகா, தெலுங்கு, கன்னடத் திரையுலகில் பல வெற்றியை கண்டுள்ளார். இவர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் மூலம் தமிழில் கதநாயகியாக அறிமுகம் ஆன இவர் இந்தப் படத்தில் விரைவில் இணைய உள்ளதாக செய்தி வந்தது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. படக்குழு இன்னும் திரைக்கதை பணிகள் முடியவில்லை அதன் பின்னர்தான் நாயகி பற்றி அறிவிப்பு வெளி வரும் என்று தெரிவித்துள்ளது.

Image result for ராஷ்மிகா மந்தானா

 

இந்த படம் குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் “இதற்கு முன் அவரிடம் கதையை கூறினேன். அப்போது அவர் மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் பிசியாக இருந்தார். நானும் வேறு படங்களில் பிசியாகிவிட்டேன். தற்போது எல்லாம் ஒன்றுசேர்ந்து வந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேலும் அனிருத் இசையமைக்க இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட போவதாக படக்குழு திட்டமிட்டுள்ளது.