“என்னது!”.. 60 வருடங்களுக்கு முன்பே ஒமிக்ரான் பற்றிய திரைப்படமா…? வைரலான போஸ்ட்…!!

ஓமிக்ரோன் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்  இந்நிலையில் சுமார் 60 வருடங்களுக்கு முன்பாகவே ஒமிக்கரான் தொடர்பில் திரைப்படம் வெளிவந்ததாக தகவல் பரவி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி அன்று கண்டறியப்பட்டது, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில், கடந்த 1963 ஆம் வருடத்தில், “தி ஓமிக்ரான் வேரியன்ட்” என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளி வந்ததாக தற்போது இணையதளங்களில் ஒரு போஸ்டர் வைரலாக பரவி வருகிறது.

பிரபல திரைப்பட இயக்குனரான ராம்கோபால் வர்மா, “இதனை நம்பினால் நம்புங்கள், இந்த திரைப்படம் கடந்த 1963 ஆம் வருடத்திலேயே வெளியாகிவிட்டது” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அவர் பகிர்ந்த போஸ்டரில், “உலகம் கல்லறையான தினம்” என்ற டேக் லைன் உள்ளது.

எனவே, அதனை பலரும் இணையதளங்களில் பகிரத் தொடங்கினர். ஆனால், “இது உண்மையல்ல” என்று தற்போது தெரிய வந்திருக்கிறது. அதாவது, அயர்லாந்தின் பிரபல இயக்குனர் மற்றும் எழுத்தாளரான பெக்கி சீட்டில் கடந்த மாதம் 28-ஆம் தேதி அன்று, தனது ட்விட்டர் பக்கத்தில் திரைப்படங்கள் சிலவற்றின் போஸ்டர்களில் மாற்றங்கள் செய்து பதிவிட்டிருக்கிறார்.

மேலும், 1970ஆம் காலகட்டங்களில் வெளியான திரைப்பட போஸ்டரில், “தி ஒமைக்ரான் வேரியன்ட்” என்று போட்டோஷாப்பில் மாற்றம் செய்து பதிவிட்டதாக கூறியிருக்கிறார். மேலும், தான் இதை வேடிக்கையாக செய்ததாகவும், நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுமாறும், அவர்  பதிவிட்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை.

எனினும், இத்தாலியைச் சேர்ந்த யுகோ கிரிகோர்டி என்ற இயக்குனரின், “ஒமிக்ரான்” என்ற திரைப்படம் கடந்த 1963 ஆம் வருடத்தில் வெளியானது. ஆனால் அது அறிவியல் தொடர்பான கதை. அதற்கு கொரோனா மாறுபாடான ஒமிக்ரானிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *