மீண்டும் மீண்டும் பொய் சொன்னால் உண்மையாகிவிடுமா..? விஷாலுக்கு ராதிகா கேள்வி..!!

முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா? என்று நடிகர் விஷாலுக்கு நடிகை ராதிகா கேள்வி எழுப்பி உள்ளார்.

வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.  வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு , நேற்று மனுக்களை வாபஸ்  பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து இன்று வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாண்டவர் அணியினர் நடிகர் சங்க விவகாரம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அதில் நடிகர் சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருந்த போது எதையும் செய்யவில்லை என்றும், நடிகர் சங்கத்தில் அவர் முறைகேடாக செயல்பட்டார்கள் என்றும் பல்வேறு அடுக்கடுக்கான குற்றசாட்டை தெரிவித்தனர்.

Image result for விஷால் ராதிகா

இது குறித்து நடிகை ராதிகா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் , சரத்குமார் மீது மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூறிய பழைய பல்லவியை வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி வேடிகையாக இருக்கிறது. சரத்குமார் மீதான குற்றச்சாட்டுகளை இதுவரை நிரூபித்திருக்கிறீர்களா..? முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.