“இது கோழியா, இல்லனா காக்காவா”… சிக்கனை பார்த்து டென்ஷனான வனிதா…. இன்ஸ்டாவில் கோபமான பதிவு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது சொந்தமாக ஒரு youtube சேனல் வைத்திருப்பதோடு சென்னையில் சொந்தமாக ஒரு துணி கடையையும் வைத்திருக்கிறார். இந்நிலையில் வனிதா விஜயகுமார் தற்போது ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் பிரபலமான அந்த கடையில் சிக்கன் மிக சிறியதாக இருக்கிறது. இது தொடர்பான புகைப்படத்தை வனிதா தன்னுடைய instagram பக்கத்தில் பதிவிட்டு இது கோழியா இல்லனா காக்காவா என்று கேள்வி கேட்டிருக்கிறார். மேலும் இந்த பதிவுக்கு தற்போது நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.