மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப் போகிறாரா….? நடிகை பூஜா ஹெக்டேவின் திடீர் விளக்கம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் பூஜாவுக்கு கை கொடுக்காததால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கு தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது பல மொழிகளில் நடிக்கும் பூஜா, தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் நடிகை பூஜா பற்றி சமீப காலமாகவே இணையத்தில் ஒரு தகவல் தீயாக பரவி வந்தது. அதாவது நடிகை பூஜா மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் பரவியது.

இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை பூஜா ஹெக்டே தன்னுடைய இணையதள பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, சமீப காலமாகவே முன்னணி நடிகர்- நடிகைகள் குறித்த ஆதாரமற்ற தகவல்கள் இணையத்தில் பரவுகிறது. நான் தற்போது ஹைதராபாத்தில் இருக்கிறேன். கடந்த ஒரு மாதமாக விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளிநாடு சென்றிருந்தேன். தற்போது வீட்டிற்கு திரும்பியுள்ள நான் நடிகர் மகேஷ்பாபுடன் ஒரு படத்தில் நடிப்பதற்கு தயாராகி கொண்டிருக்கிறேன். இது தவிர என்னுடைய உடம்பில் எந்த பகுதியிலும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக நான் வெளிநாடு செல்லவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. மேலும் என்னை பற்றி பரவும் தவறான வதந்திகளை என்னுடைய ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.