நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சார்பாக மளிகைக்கரை -ராசிபுரம்- திருச்செங்கோடு – ஈரோடு ஆகிய வழித்தடங்களில் சாலை விரிவாக்க பணிகளும், மேம்பால பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆசிய வளர்ச்சி துறை, வங்கி நிதி உதவியுடன் சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறை சார்பாக இந்த பணிகள் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு பள்ளிபாளையம் பகுதியில் திருச்செங்கோடு சாலையில் ஆசிரியர் காலனி பகுதியில் இருந்து பள்ளிபாளையம் வரை மேம்பாலம் அமைக்க 92 பிரம்மாண்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை நெடுஞ்சாலை துறை பணி தலைமை பொறியாளர் செல்வன் இந்த பணிகளை நேற்று ஆய்வு செய்துள்ளார்.
இந்த ஆய்வின் போது கோட்ட பொறியாளர் சசிகுமார், உதவி கோட்ட பொறியாளர்கள், நெடுஞ்சாலை துறை ஆலோசகர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிலையில் பாலத்தின் தரம் சாலை சரியானபடி விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறதா? தூண்கள் சரியான அளவில் அமைக்கப்பட்டுள்ளதா? மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் இரு வழி சாலைகள் அமைக்கும் பணிகளையும் இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றும் பணியையும் ஆய்வு செய்தனர்.