அண்ணாமலைக்கு வெட்கம் இல்லையா ? காயத்ரி ரகுராம் காட்டம்!!

தமிழக பாஜக மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் தமிழக பாஜகவில் அடுத்தடுத்து பல அதிரடி மாற்றம் ஏற்பட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் பெரிய பெரிய தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் குறைபாடுகளை சரிசெய்து, கட்சியை தமிழகம் முழுவதும் வளர்த்தெடுக்கும் வகையில் மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வந்தார். பல போராட்ட அறிவிப்பு வெளியிட்டார்.

குறிப்பாக அண்ணாமலையில் செயல்பாடுகளால் மேல்மட்ட தலைவர்களோடு மோதல் போக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே பல்வேறு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டன. அதே நேரத்தில் அண்ணாமலைக்கு எதிரான செயல்பாடுகளும் கட்சிக்குள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே அண்டை மாநில பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தபோதிலும் அவர் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் அடுத்தடுத்து கருத்துக்களை ட்விட்டர் வாயிலாக பகிர்ந்து வந்தார். இதனால் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட  காயத்ரி ரகுராம் அண்ணாமலை அண்ணாமலைக்கு எதிராக நேரடியாக மோதல் போக்கில் ஈடுபட தொடங்கி உள்ளார்.

அண்ணாமலை ஏதேனும் கருத்து சொன்னாலும் சரி, ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டாலும் சரி, ஏதேனும் முடிவெடுத்தாலும் அதற்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டு வரும் அவர் சமீபத்தில், ஒரு நேரம் நான் இல்லாமல் வேறு யாரும் இல்லை என்கிறார் அண்ணாமலை. மறுநேரம் பா.ஜ.க பலம் வாய்ந்தவர்கள் இல்லை. அறிமுகமான, தகுதிவாய்ந்த
வேட்பாளர் பாஜகவில் இல்லை என்கிறார் அண்ணாமலை. என்ன ஒரு வீழ்ச்சி. நிலைத்தன்மையும் இல்லை. அண்ணாமலையால் பாஜக பின்னடைவைச் சந்திக்கிறது.

நான் போட்டியிடவில்லை என்று சொல்ல வெட்கமா அண்ணாமலை? நீங்களும் பிரபலமான, அறிமுகமான, தகுதிவாய்ந்த வேட்பாளர் இல்லையா? பாஜகவில் போட்டியிட யாரும் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? நீங்கள் பாஜகவில் இருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் சொந்தக் கட்சி தொடங்கவில்லை. மறக்க வேண்டாம் என ட்விட் செய்துள்ளார்.