வரலாற்று சாதனை நிகழ்த்திய அயர்லாந்து கிரிக்கெட் வீரர்….!!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 11ஆவது வீரராக களமிறங்கி 2 இன்னிங்ஸில் 25 ரன்களுக்கு மேல் குவித்து அயர்லாந்து கிரிக்கெட் வீரர் சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள  தலைநகர் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 11-ஆவது வீரராகக் களமிறங்கிய அயர்லாந்தின் டிம் முர்டாஃக், முதல் இன்னிங்சில் 54 ரன்களும், 2-வது இன்னிங்சில் 27 ரன்களும் எடுத்தார்.

142 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இதுவரையில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் நிகழ்த்தாத சாதனையை  டிம் முர்டாஃக், நிகழ்த்தியுள்ளார்.  11ஆவதாக   களமிறங்கிய எந்த ஒரு வீரரும் இதுவரையில்  இரு இன்னிங்சிலும் 25 ரன்களுக்கு மேல் குவித்ததில்லை. அப்படி இருக்கும் சூழலில் தற்போது இந்த வரலாற்றுச் சாதனையை அயர்லாந்து அணி வீரர் டிம் முர்டாக் படைத்துள்ளார். இந்த சாதனையால் அவர் மட்டுமின்றி ஒட்டு மொத்த   அயர்லாந்து அணி வீரர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.