கிழக்கு கடல் பகுதியில்…. ஏவப்பட்ட இரு ஏவுகணைகள்…. தொடர் அடாவடியில் வடகொரியா….!!!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா வடகொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து அடாவடியில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செயற்கையாக ரேடியோ ஆக்டிவ் சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை கடலுக்கு அடியில் சோதனை செய்துள்ளது.

இதனால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. அதேபோல் இன்றும் மேலும் இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. அதாவது கிழக்கு பகுதியில் காலை 8 மணி அளவில் ஏவப்பட்ட இரு ஏவுகணைகளும் ஜப்பானின் பொருளாதார மண்டலத்தை தாண்டி கடலில் விழுந்ததாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது. தென் கொரியா நாட்டின் புசன் துறைமுகத்திற்கு அமெரிக்காவின் போர் கப்பல் நங்கூரம் இட்டுள்ளது. இந்த நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.