ஈராக்கில் 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை…மருத்துவர்கள் அதிர்ச்சி …!!!

ஈராக்கில் இளம்பெண் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதித்த போது ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

வட ஈராக் மொசூல் நகரைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரது கணவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மேலும் மருத்துவர்கள் அவரை பிரசவ அறைக்குள் அழைத்துச் சென்று பிரசவம் பார்த்த போது அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது .ஆனால் மருத்துவர்கள் ஆண் குழந்தையை பார்த்து அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார்கள்.

அதன்பிறகு தான் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தைக்கு 3 ஆண் பிறப்புறுப்புகள் இருப்பது தெரியவந்தது. இந்த மனித வரலாற்றிலேயே முதல் முறையாக 3 ஆண் உறுப்புகளுடன் பிறந்த குழந்தை என கூறினார்கள். இதுவரை 6 பில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன அதில் இரண்டு உறுப்புகளுடன் கூடிய குழந்தைகள் கூட பிறந்திருக்கிறது.

இதுவே முதல் முறை 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்துள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பச்சிளம் ஆண் குழந்தையின் 3 பிறப்புறுப்புகளில் ஒன்று மட்டுமே நன்றாக செயல்படுவதாகவும் மற்ற இரண்டும் செயல்படாத நிலையில் இருப்பதால் அதனை இப்பொழுதே அறுவை சிகிச்சை செய்து நீக்கி விடலாம் என்று மருத்துவர்கள் குழந்தையின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

இதனால் குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறியதை அடுத்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அபூர்வ சம்பவம் குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சலீம் ஜபாலி இனி அந்தப் பச்சிளம் ஆண் குழந்தை மற்ற குழந்தைகளைப் போலவே இருப்பார் என்று கூறியுள்ளார்.