குழந்தைகளுடன் IPL பார்த்த நடிகர் தனுஷ்……!!

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியை நடிகர் தனுஷ் பார்த்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற  I.P.L  தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி சென்னை அணியில் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சுருண்டது.முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கு வெறும் 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த ஆட்டத்தை  காண கொல்கத்தா அணியின் உரிமையாளாரும் , பிரபல நடிகருமான ஷாருக்கான் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தார். மேலும் இந்த போட்டியை பார்க்க  இயக்குனர் அட்லியும், அவரது மனைவி ப்ரியாவுடன் வந்திருந்தார். பின்னர் நடிகர் ஷாருக்கானும் இயக்குனர்  அட்லியும்  ஒன்றாக அமர்ந்து  இந்தப் போட்டியை பார்த்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகி வந்த சில நிமிடங்களில் நடிகர் தனுஷ் தன்னுடைய இரண்டு மகன்களுடன் I.P.L போட்டியை காண வந்திருந்ததும் அங்கே இருந்த ரசிகர்களுக்கு தெரிய வர  நடிகர் தனுஷ் அமர்ந்திருந்து போட்டியை பார்ப்பது போன்ற புகைப்படத்தை வைரலாக்கி வ்ருகின்றனர்