ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெறும் இடத்தில் காவல்துறை, ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வருகின்ற 23_ஆம் தேதி ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா தொடங்கி முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. ஐபிஎல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆட்டம் , பாட்டம் கொண்டாட்டம் தான்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இணையதளம் மூலமாகவும், நேரடி டிக்கெட் கவுன்டர் மூலமும் தொடங்கியது . இன்று காலை 11:30க்கு தொடங்கிய டிக்கெட்_டை நேரடி டிக்கெட் கவுன்டர்களில் பெறுவதற்கு நள்ளிரவு முதலே அதிகளவில் ரசிகர்கள் குவிந்து கொண்டே இருந்தனர்.
இந்நிலையில் சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை நடந்த இடத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால் காவல்துறை மற்றும் ரசிகர்களுக்கிடையே இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது . இதை சமாளிக்க போலீசார் லேசான தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.