ஐபிஎல் 2024 31-வது லீக் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த இரு அணிகளும் அசத்தலாக விளையாடி வருவதால் எந்த அணியின் கை ஓங்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது.

அதன் பிறகு ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இந்த இரு அணிகளும் வலுவாக இருக்கும் நிலையில் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேராக சந்தித்துள்ளனர். இதில் 13 போட்டிகளில் ராஜஸ்தான் அணியும், 14 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் என்பதால் வெற்றி யாருக்கு என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.