IPL 2022: பஞ்சாப் VS டெல்லி…. குழப்பம் இருந்தாலும் விளையாட்டில் கவனம் செலுத்தினோம்…. ரிஷப் பண்ட்…..!!!!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியானது 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி நிறைவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேசியதாவது “தம் அணியில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதால் குழப்பமும் பதட்டமும் இருந்தது. எனினும் நாங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினோம்.

பஞ்சாப் அணியை 115 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய அற்புதமான பந்து வீச்சுக்குப் பின் டேவிட் வார்னர் மற்றும் ப்ரித்வி ஷா அணியை பெரிய வெற்றிக்கு அழைத்துச் சென்றதாகவும், இருவருக்குமே தேவையில்லாத அறிவுரைகளை வழங்க தாம் ஒரு போதும் முயற்சிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே டெல்லி அணியில் உடல்தகுதி நிபுணர்கள், மருத்துவர், சமூக ஊடக உள்ளடக்ககுழு உறுப்பினர் மற்றும் வீரர்கள் உள்பட 6 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாளை டெல்லி -ராஜஸ்தான் அணிகள் இடையேயான போட்டி புனேவுக்கு பதிலாக  மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம்  தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *