IPL 2021 : தடுமாறும் பெங்களூர் அணி ….! 15 ஓவரில் 7 விக்கெட் ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றன .

இதில் இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர்  அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி – தேவ்தத் படிக்கல் ஜோடி களமிறங்கினர். இதில் விராட் கோலி 5 ரன்னில் ஆட்டமிழக்க ,அவரைத் தொடர்ந்து  தேவ்தத் படிக்கல் 22 ரன்னில் ஆட்டமிழந்தார் .

இதன்பிறகு களமிறங்கிய கேஎஸ்.பரத் 16 ரன்னிலும், மேக்ஸ்வெல் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ஏபி டிவில்லியர்ஸ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார் .பெங்களூர் அணி  15 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் குவித்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *