“ஐஎன்எக்ஸ் வழக்கு”மடில கணம் இல்லைனா வழியில் பயம் ஏன்..? தமிழிசை கேள்வி..!!

சிதம்பரம் கைது தொடர்பாக பேசிய தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு  தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதுகுறித்து கூறுகையில்,

Image result for தமிழிசை

நேற்று இரவு நடந்த பல்வேறு குழப்பங்களுக்கு சிதம்பரமே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சார்ந்த ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பது நமக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால் பெரிய குழப்பத்திற்கு பின்புதான் சிதம்பரம் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த குழப்பத்திற்கு காரணம் அவர்தான். சட்டரீதியாக நேர்மையாய் எதிர்கொண்டிருந்தால், நேற்று இரவு இந்த நாடகம் நடந்திருக்காது என்று தெரிவித்தார். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர்,மிக மோசமான முன்னுதாரணத்தை சிதம்பரம் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் என்று தெரிவித்தார்.