அதிகரிக்கும் கொரோனா… ஒரே நாளில் 614 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 614 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்றுப் வருவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 614 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 709 ஆக உயர்ந்துள்ளது.  இதனையடுத்து தொற்றல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 752 பேர் சிகிச்சையிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *