“இந்தியாவில் புதிதாக 75 ரூபாய் நாணயங்கள் அறிமுகம்”…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதை கொண்டாடும் விதமாக ஒன்றிய அரசு 75 ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை மே 28-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார்.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதை கொண்டாடும் விதமாக மத்திய அரசு 75 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய நாணயத்தில் நாடாளுமன்ற கட்டிடம், நாடாளுமன்ற வளாகத்தின் படங்கள் போன்றவைகள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply