வந்தாச்சு வாட்ஸ்அப்-ல் பிங்கர் பிரிண்ட் வசதி…!!!

பயனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாத்துக்கொள்ள பிங்கர் பிரிண்ட் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதை தொடர்ந்து பல அப்டேட்களை உடனுக்குடன் செய்து வருகிறது. அந்த வகையில் பயனாளர்களின் தகவல் பரிமாற்றங்களின்  பாதுகாப்பை அதிகரிக்க பிங்கர் பிரிண்ட் மூலம் செயல்படும் வசதியை கொண்டு வர உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் சோதிக்கப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

 

Image result for வாட்ஸாப்ப் பிங்கர் பிரிண்ட்

தற்போது அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் அப்பில் உள்ள அக்கவுண்ட் ஆப்ஷனுக்கு சென்று அதில் உள்ள பிரைவஸி ஆப்ஷனை கிளிக் செய்து  ஃபிங்கர் பிரிண்ட் வசதியை பயனாளர்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம். அதனை ஆன் செய்தால் கைரேகை கேட்கும் பயனாளர்கள் தங்கள் கை ரேகையை கொடுக்க அனுமதித்தால்  வாட்ஸ்அப்  லாக் ஆகிவிடும். மீண்டும்  வாட்ஸ்அப்-ஐ திறக்க பயனாளர்களின் கைரேகை அவசியம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.