புதிய கவாஸ்கி நின்ஜா ZX-10R அறிமுகம் … தெறிக்கவிடும் கலர்களில் போட்டியாக விரைவில் ..!!

கவாஸ்கி நிறுவனம் தனது புதிய கவாஸ்கி நின்ஜா ZX-10R. மோட்டோர் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது.

புதிய கவாஸ்கி நின்ஜா ZX-10R. மோட்டோர் சைக்கிளில் கருப்பு மற்றும் பச்சை வண்ணங்களிலும் , சிலஇடங்களில்  தங்க நிற ஹைலட்டர்கலுடனும் ,  தோற்றத்திலும்  மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கவாஸ்கி நின்ஜா ZX-10R 2020 பைக் ஆனது வருகிற அக்டோபர் மாதம் முதல் விற்பனை செய்யப்படவுள்ளது . இதன் விலை ரூ.13.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

Image result for கவாஸ்கி நின்ஜா ZX-10R.

மேலும், கவாஸ்கி நின்ஜா ZX-10R பைக் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 11,200 ஆர்.பி.எம் என்ற கணக்கில் டார்க் வெளியீடு 114.9 என்.எம் கொண்டுள்ளது. இந்த பைக் 998 சிசி நான்கு சிலிண்டர்கள் உடனான என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் , 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல், மூன்று ரைடிங் மோட்,

Image result for கவாஸ்கி நின்ஜா ZX-10R.

 

6 ஆக்சிஸ் ஐ.எம்.யூ, என்ஜின் ப்ரேக் கன்ட்ரோல், ஏபிஸ் என அத்தனை நவீன அப்டேட்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக் டுகாட்டி பனிகேல் வி4, சுசூகி ஜி.எஸ்.எக்ஸ்-R1000, ஹோண்டா சிபிஆர்-1000ஆர்.ஆர், யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்1, பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்.ஆர் மற்றும் அப்ரில்லியா ஆர்.எஸ்.வி.4 ஆர்.ஆர் ஆகிய பைக்குகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.