‘கொலை மிரட்டல்’ இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை…!!!!

ஆந்திர மாநிலத்தில் கொலை மிரட்டல் விட்டதால் இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ரத்னஸ்ரீ  என்ற 18 வயது இளம் பெண்ணின் பெற்றோர் சமீபத்தில் உயிரிழந்ததால் தனது பாட்டி வெங்கம்மாவுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒருவருடமாக கல்லூரி சென்று வருகையில் வமிசெட்டி என்கின்ற இளைஞர் ரத்னஸ்ரீயை அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில்  சிறிது வேலையாக வெங்கம்மா வீட்டில் இருந்து வெளியில் சென்றதால்  ரத்னஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இதை எப்படியோ தெரிந்த கொண்ட வமிசெட்டி அவர் வீட்டிற்குள் சென்று ரத்னஸ்ரீயை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

 

இதனால் பயந்து போன ரத்னஸ்ரீ அருகில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவரது பாட்டி வெங்கம்மா, தனது பேத்தி மயங்கிய நிலையில்  கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே  ரத்னஸ்ரீயை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இதையெடுத்து சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் இதன் தொடர்பாக வெங்கம்மா அளித்த  புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வமிசெட்டி என்ற இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.