இந்தியாவில் அறிமுகமாகுமா….? டுவிட் செய்த யூடிப்பர்…. பதிலளித்த டெஸ்லா நிறுவனத் தலைவர்…!!

மின்சார வாகனங்களை இந்தியாவில் சந்தைப்படுத்துதல் குறித்து யூடிப்பர் மதன் கௌரி கேட்டதற்கு டெஸ்லா நிறுவனத் தலைவர் பதிலளித்துள்ளார்.

உலகின்  கார் தொழில் நுட்ப முன்னணி நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா நிறுவனம் திகழ்ந்துவருகிறது. இந்த நிறுவனத்தில் எரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனமானது தங்களின் வாகனங்களை பல்வேறு நாடுகளில் சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் தற்போது மின்சார வாகனங்களை பற்றிய புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து பிரபல யூடிப்பர் மதன் கௌரி டெஸ்லா நிறுவனத்தின் வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க் பதில் அளித்துள்ளார்.அதில் “நாங்களும் இதைதான் விரும்புகிறோம். உலகில் உள்ள பெரிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இறக்குமதி வரிகள் உயர்வு. மேலும் மின்சார வாகனங்கள் எரிபொருள் வாகனத்தை போன்றே. ஆனாலும்  இந்திய சூழலுக்கு சந்தைப்படுத்தவது என்பது உகந்ததல்ல” என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவானது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *