“இந்த வருஷம் ‘டும் டும் டும்’ கன்பார்ம்”…. ரகசியம் சொன்ன விக்கி-நயன்…. ஜாலியோ ஜாலி தா….!!!

நடிகை  நயன்தாரா,இயக்குனர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவு  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர்  ரஜினி ,விஜய் அஜீத், சூர்யா ,தனுஷ் உட்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது  கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதோடு தெலுங்கு , மலையாளம் உட்பட பல மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் .இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார் .அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து தற்போது இருவரும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரின் திருமணத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘யாரெல்லாம் 2-22-22 தேதியில் திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள். நான் இந்த தேதியில் மிஸ் செய்ய விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரின் திருமணம் தேதியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சமந்தா , நயன்தாரா இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *