இந்த 2 வேடத்திலும் நடிக்க எனக்கு ஆசை – நடிகை பிரியாமணி

தான் நடிக்க விரும்பும் இரண்டு கதாபாத்திரம் குறித்து நடிகை பிரியாமணி கூறியுள்ளார். 

2004 ம் ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. “பருத்திவீரன்” படத்தில் நடித்து பிரபலமானதுடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகை பிரியாமணி கொரோனா ஊரடங்கில் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நான் ‘விராட பருவம்’ என்ற படத்தில் நக்சலைட்டாக நடித்து வருகிறேன். ஊரடங்கில் கதைகள் கேட்கிறேன்.

சினிமா துறையில் ஒரு காலத்தில் கதாநாயகனுக்கு ஒரு மரியாதை கதாநாயகிக்கு ஒரு மரியாதை என்று வித்தியாசம் இருந்தது. தற்போது அந்நிலை மாறிவிட்டது. காஜல் அகர்வால், தமன்னா, நயன்தாரா, சமந்தா போன்றவர்கள் மார்க்கெட்டை பொருத்து சம்பளம் வாங்குகின்றனர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். பணத்தின் மீது எனக்கு ஆர்வம் இல்லை. எனக்கு கொடுக்கும் சம்பளத்தில் மகிச்சியாக உள்ளேன். மேலும் எனக்கு நல்ல கணவர் மற்றும் குடும்பம் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

திருமணமான மூன்றாவது நாளில் படப்பிடிப்பிற்கு சென்றேன். எனக்கு கணவரின் குடும்பத்தில் நல்ல ஆதரவு கிடைத்தது, எனவே சினிமாவில் நீட்டிக்க விரும்புகிறேன். என்னுடைய கணவர் தான் கால்ஷீட் விஷயங்களை கவனித்து வருகிறார். ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி போன்ற வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு ஆசையாக உள்ளது. முழு நீள நகைச்சுவை வேடத்தில் நடிக்கவும் ஆசை. படப்பிடிப்புகள் தற்போது துவங்குவது போல் தெரியவில்லை. எனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்” என்று நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *