“திமுகவை விமர்சிக்க தயக்கம் கிடையாது” அதிமுக_வின் மைத்ரேயன் பேட்டி …!!

திமுகவை  விமர்சிக்க  எனக்கு தயக்கம் கிடையாது என்று அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் தனது பதவி காலம் முடிந்த நிலையில் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் மைத்ரேயன் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியை வணங்க வந்தீருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் , மு க ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவிற்கு வர வேண்டும் என்று கூறியதற்காக பதிலை  எங்களுடைய தலைமை சொல்ல வேண்டும.

Image result for மைத்ரேயன்

அதிமுகவில் உள்ள   கட்சிக்கு தலைமை , ஆட்சிக்குத் தலைமை இரண்டுமே ஒன்று சேர பயணிக்கும் போது இரட்டை தலைமை இருந்தால் கூட அதை நல்ல முறையில் பயணிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. நான்  அம்மாவுக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறேன். என்னுடைய பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து மாநில அரசியலுக்கு இப்போதுதான் வந்து இருக்கின்றேன்.  திமுகவை  விமர்சிக்க  எனக்கு தயக்கம் கிடையாது என்று தெரிவித்தார்.