தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கின்றார் என்று அதிமுகவில் இணையும் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.
அமமுக_வில் இருந்து செந்தில்பாலாஜி , கலையரசன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் என பலர் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது அமமுக_வின் அமைப்பு செயலாளராக இருந்த இசக்கி சுப்பையா அமமுக_வில் இருந்து விலகி அதிமுகவில் இணைய இருக்கிறார் இசக்கி சுப்பையா. அதிமுகவின் முன்னாள் அமைச்சராகவும் , அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா தனது ஆதரவாளர்களுடன் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் , டிடிவி தினகரன் அளித்த பேட்டியால் எனக்கு மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. 70 கோடி எனக்கு அரசாங்கத்தில் பாக்கி இருக்கின்றது என்று அவரிடம் சொன்னதாகச் சொல்கிறார். தலைவரிடம் அறையில் சொன்ன ரகசியத்தை வெளியே சொல்வது தலைமைக்கு அழகானதல்ல. என்னால்தான் அடையாளம் காட்ட பட்டேன் என்று சொல்கிறார். 2009ல் அவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலேயே இல்லை.தொண்டர்களின் முதல்வராக , மக்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என்று அவர் தெரிவித்தார்.