“சங்க விதிமுறைபடியே செயல்படுகின்றோம்” நடிகர் நாசர் பேட்டி …!!

நடிகர் சங்க விதிமுறைபடியே நாங்கள் செயல்படுகின்றோம் என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தடைகளை தாண்டி நடிகர் சங்கத்தேர்தல் நாளை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற இருக்கின்றது. இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து பாண்டவர் அணியினர் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.அப்போது நடிகர்  நாசர் கூறுகையில் , நடிகர் சங்க தேர்தல் 3 வாரத்திற்கு முன்பு வரை அமைதியாகவே  நடைபெறும் என்றே நினைத்தோம்.

நடிகர் நாசர் க்கான பட முடிவு

தேர்தலுக்கு இவ்வளவு பெரிய தடை எதற்காக?  தொடர்ந்து 3 ஆண்டுகளாக  எங்களுடன் பயணித்தவர்களுக்கு  தேர்தலுக்கு முன்பு மட்டும் எங்கள் மீது எப்படி குறை தெரிந்தது.  நடிகர் சங்க விதிமுறைப்படியே நாங்கள் செயல்படுகிறோம். நடிகர் சங்க விதிமுறைகளை நாங்கள் மீறவில்லை என்று நாசர் தெரிவித்துள்ளார்.