குடிநீர் பிரச்னை “கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்” முதல்வர் பேட்டி …!!

அதிகாரிகள் நியமனம் செய்து குடிநீர் பிரச்னையை கண்காணிக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் தீர்க்க மற்றும் அதற்கான நடவடிக்கைகளை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் கூறுகையில் , சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு ஏரிகளும் வறண்டு விட்டன. ஆனாலும் சென்னை மக்களுக்கு தேவையான நீரை கொடுத்து வருகிறோம். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், நிலத்தடி நீர், குவாரிகளில் எடுக்கும் நீர் ஆகியவற்றை சேகரித்து தண்ணீர் வழங்கி வருகிறோம்.

Image result for tamil nadu chief minister

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு முடிந்த அளவுக்கு துரித நடவடிக்கை எடுத்து உரிய நீர் வழங்கப்படுகிறது. அதிகாரிகள் நியமனம் செய்து குடிநீர் பிரச்னையை கண்காணிக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது . சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு ஏரிகளும் வறண்ட நிலையில் மக்களுக்கு தண்ணீர் கொடுக்கிறோம். இதற்கு ஊடகங்கள் ஆதரவு வழங்க வேண்டும் .தேர்தல் வந்ததால் அரசு செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் நடத்தை விதிகள் முடிந்ததும் உடனடியாக கூட்டம் போட்டு, நிதி ஒதுக்கி குடிநீர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டோம் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.