ரிஷிகேஷில் நடைபெறும் சர்வதேச யோகா திருவிழா: இதன் சிறப்பம்சங்கள் என்ன…? சில தகவல்கள் இதோ…!!!

கங்கை நதிக்கு பக்கத்தில் ஆன்மீக சூழலுக்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இணக்கமான நிகழ்வு யோகா. யோகா என்பது சுவாச பயிற்சி மட்டுமல்லாமல் அது ஒரு வாழ்க்கை முறை. உலகம் முழுவதுமே யோகா அதனுடைய முழுமையான நுட்பங்களுடன் வாழ்க்கையை மாற்றியது. ஒருவருடைய வாழ்க்கையில் யோகாவை அறிமுகப்படுத்துவதற்காகவே இந்த திருவிழா ஒரு அருமையான வாய்ப்பை கொடுக்கிறதும் இந்த திருவிழா எதற்காக கொண்டாடப்படுகிறது? அதனுடைய சிறப்பு அம்சங்கள் என்ன? என்று இப்போது பார்க்கலாம்.

சர்வதேச யோகா திருவிழா 1999 ஆம் வருடம் ரிஷிகேசில் பரமார்த்நிகேதன் ஆசிரமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தியான வகுப்புகள் அனைத்துமே பூஜ்ய ஸ்ரீ சுவாமி வேத பாரதியின் வழிகாட்டுதலின் கீழ் தான் நடைபெற்றது. அதன் ஆரம்பத்திலிருந்து யோகா திருவிழாவின் புகழ் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. மனிதனுடைய ஆன்மாவை தூண்டும் இந்த திருவிழாவினுடைய வேர்கள் மிகவும் அற்புதமான நினைவாற்றல் நுட்பங்களோடு ஒன்றான யோகாவோடு தொடர்புடையது. இது மனிதனுடைய மன நிம்மதிக்கும், ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் வித்திடும் என்பதில் ஐயமில்லை. யோகா நிகழ்ச்சி என்பது நினைவாற்றலை அடைய விரும்பும் மக்களுடைய ஒரு கூட்டமாகும். இதில் பாரம்பரிய நடனங்களும், பாட்டு கச்சேரிகளும் அடங்கும்.