சர்வதேச யோகா தினம் : செங்கோட்டையன் , தமிழிசை பங்கேற்பு …!!

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் , பாஜக மாநில தலைவர் தமிழிசை கலந்து கொண்டனர்.

இந்தியா முழுவதும் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்ற யோகா தினத்தை பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் யோகாசனம் செய்து கொண்டாடி வருகின்றனர்.நாட்டின் பல்வேறு இடங்களிலும் , பள்ளிகளிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும்  தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்று யோகாசனகளை செய்தனர்.இதில் பாஜக கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு யோகா தினத்தை கொண்டாடினர்.