“நடிகர் சங்க தேர்தல்” முடிவுகளை வெளியிட இடைக்கால தடை நீட்டிப்பு…. உயர்நீதிமன்றம் அதிரடி..!!

நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சங்க தேர்தலை தடை செய்யக்கோரி தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து நடிகர் விஷால்  தேர்தலை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்றும், ஆனால்   வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதியில்லை என்றும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து நடிகர் விஷால் வாக்குகளை எண்ண விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி அளித்த மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரி சேலத்தை சேர்ந்த துணை நடிகர் பெஞ்சமின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.