இன்ப்ளூயன்சா குறைந்துள்ளது…. ஆனால்?…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்….!!!!!

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதோடு பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்ப்ளூயன்சா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்து பூஜ்ஜியம் என்ற அளவிற்கு வந்துவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இன்ப்ளூயன்சாவின் தாக்கம் குறைந்தாலும் உருமாறிய ஒமிக்ரான்  XBB BA 4 தாக்கம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். நாளொன்றுக்கு 80 பேர் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.