புதுமையான வாழைக்காய் வடை !!!

வாழைக்காய் வடை

தேவையான  பொருட்கள்:

வாழைக்காய் –  4

பச்சைப் பயறு – 100 கிராம்

வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 10

இஞ்சி –  ஒரு துண்டு

கொத்தமல்லி –  தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

valakkai க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் வாழைக்காய்களை  வேக வைத்து  எடுத்துக் கொள்ள வேண்டும் . பச்சைப் பயறை ஒரு மணி நேரம் ஊற வைத்து , பச்சைமிளகாய்,  இஞ்சி,  தேவையான  உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் மசித்த வாழைக்காய் , நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் புதுமையான வாழைக்காய் வடை  தயார் !!!