“வாலிபர் உயிரை பறித்து விட்டு தப்பி சென்ற ஓட்டுநர் “காவல்துறை தீவீர தேடல் !!…

சரக்கு வேன் மோதி வாலிபர் இறந்த சம்பவம் நாமக்கல் மாவட்டம் நாகூர் பகுதி மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது 

நாகூரை அடுத்த காரைமேடு பகுதியை சேர்ந்தவர்  கவியரசன் .இவர் நேற்று இரவு ஒரு சிறு பணிக்காக நாகூருக்கு  மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டு இருக்கும் பொழுது நான் ஊருக்கு முன்பாக உள்ள தேரடி  பகுதியில் உள்ள மெயின் சாலையில் வந்த சரக்கு ஏற்றிச் செல்லும் வேன் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுனர் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று விட்டார்

தகவலறிந்த நாகூர் காவல் நிலைய அதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் பிற காவல்துறையினர் கவியரசன் உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போலீசார் தப்பிச் சென்ற வேன் ஓட்டுநர் தேடி வருகிறார்கள்.