IND-W VS NZ-W : நியூ.சியிடம் வீழ்ந்தது இந்தியா ….! 63 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி ….!!!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி தொடரை இழந்தது. இந்நிலையில் இன்று 4-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 20 ஓவராக குறைக்கப்பட்டது.அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

இதில் அதிகபட்சமாக அமிலா கெர் 68 ரன்னும் , சூஸி பேட்ஸ் 41 ரன்னும்  குவித்தனர். இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் 2 விக்கெட் கைப்பற்றினார். இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா, யஷ்திகா பாட்டியா, பூஜா வஸ்த்ரேகர், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் மிதாலி ராஜ் – ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் 52 ரன்களில் ரிச்சா கோஷ் ஆட்டமிழக்க,  மிதாலி ராஜ் 30 ரன்னில் வெளியேறினார்.இறுதியாக இந்திய அணி  17.5 ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 128 ரன்னில்  சுருண்டது. நியூசிலாந்து அணி சார்பில் ஹீலி ஜான்சன், அமிலா கெர் ஆகியோர் தலா 3 விக்கெட்  கைப்பற்றினர்.இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மகளிர் அணி  4-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலையில் உள்ளது.