இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா இலங்கை தொடர் முடிவடைந்த பின் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக ஆடும் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுத்தி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆல்ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் அணிக்கு தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பென் லிஸ்டர் மற்றும் ஹென்றி ஷிப்லி முதல் முறையாக BLACKCAPS டி20 அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்..
நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தானில் விளையாடி வரும் நிலையில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 0-0 என சமன் செய்த நிலையில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என சமநிலையில் உள்ளது. இன்று 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது நியூசிலாந்து. பின்னர் அவர்கள் ஹைதராபாத் (ஜனவரி 18), ராய்ப்பூர் (ஜனவரி 21) மற்றும் இந்தூரில் (ஜனவரி 24) ஆகிய 3 ஒருநாள் போட்டிகளுக்காகவும், ராஞ்சி (ஜனவரி 27), லக்னோ (ஜனவரி 29) மற்றும் அகமதாபாத் (பிப்ரவரி 1) ஆகிய மூன்று டி20 போட்டிகளுக்காகவும் இந்தியாவுக்கு வருவார்கள்..
இந்திய தொடருக்கான நியூசிலாந்து டி20 அணி :
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளீவர், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், பென் லிஸ்டர், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரிப்பன், ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி, பிளேயர் டிக்னர்.
Our T20 Squad to face India in 3 T20Is starting later this month in Ranchi! Congratulations to @aucklandcricket's Ben Lister and @CanterburyCrick's Henry Shipley on being selected in a BLACKCAPS T20 Squad for the first time. More | https://t.co/bwMhO2Zb76 #INDvNZ pic.twitter.com/jFpWbGPtGx
— BLACKCAPS (@BLACKCAPS) January 12, 2023