நான் துண்டு சீட்டா…? ”ஆதாரத்தோடு பேசுங்க” முக.ஸ்டாலின் பதிலடி….!!

எதையும் ஆதாரத்தோடு பேசவேண்டும், பாஜகவினர் போல வாய்க்கு வாந்தபடி பேசக்கூடாது என்று துண்டு வைத்து பேசுவதற்கு ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சமாதானபுரத்தில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் நீங்கள் துண்டு சீட்டு இல்லாமல் எங்கேயும் பேசமாட்டீர்களாமே என்று பாஜகவினர் விமர்சனம் செய்கின்றார்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,

Image result for துண்டு சீட்டு ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் , அது அவங்களுடைய தரத்தை காட்டுகின்றது. இதை பற்றி நான் கவலைப்படவில்லை. எதையும் ஆதாரத்தோடு சொல்லனும். வாய்க்கு வந்தபடி சொல்லிட்டு போக கூடாது. ஆதாரம் இல்லாமல் தமிழிசை மாதிரி ,H.ராஜா மாதிரி பேச கூடாது என்று ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.