இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து …. 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் ….!!!

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர்            2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் .

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடர் பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் ஜப்பானை சேர்ந்த அயா ஒஹோரியுடன் மோதினார். இதில் 17-21, 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் போராடி வெற்றி பெற்ற பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதையடுத்து ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சக நாட்டு வீரரான எச்.எஸ். பிரனாயை எதிர்த்து மோதினார். இதில் 21-15, 19-21, 21-12  என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த்  2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதை தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-19, 21-18 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சை சேர்ந்த தோமா ஜூனியர் போபோவை தோற்கடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *