இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி….!!!

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார் .

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி காலி நகரில் நடைபெற்று வருகிறது.இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவில் பி.வி.சிந்து ,8-வது இடத்தில் உள்ள தாய்லாந்தை சேர்ந்த ராட்சனோக் இன்டானோனை எதிர்த்து மோதினார்.இதில்  21-15, 9-21, 14-21  என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து ,  ராட்சனோக்கிடம் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 16-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவை சேர்ந்த மார்கஸ் பெர்னால்டி ஜிடோன்-கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோ ஜோடியிடம் தோல்வியை சந்தித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *