இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் …. தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு ….!!!

இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இதில் அணியின் கேப்டனாக டெம்பா பவுமாவும், துணைக்கேப்டனாக கேஷவ் மகாராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில்  நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி: டெம்பா பவுமா (கேப்டன் ), கேசவ் மகராஜ், குயின்டன் டி காக், ஜுபைர் ஹம்சா, மார்கோ ஜான்சன், ஜான்மேன் மலான், சிசண்டா மாகலா, ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, வெய்ன் பார்னெல், அண்டில் பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரைன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *