இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்….. புவனேஷ்வர் குமாரின் தந்தை காலமானார் …!!!

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ் குமாரின் தந்தை கிரண் பால் சிங் , கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இவரின் தந்தை கிரண் பால் சிங் உத்திரபிரதேச மாநிலத்தில் காவல் துறையில் பணியாற்றியவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட புவனேஸ்வர் குமாரின் தந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 2 வாரங்களுக்கு ,முன் இவரின் உடல் நிலை மோசமானதால், மீரட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி, புவனேஷ்வர் குமாரின் தந்தை கிரண் பால் சிங் உயிரிழந்தார்.இவரின்  தந்தை மறைவிற்கு சக வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *