அஜீரணக் கோளாறு, உடல் எடையை குறைக்கும் சீரகத்தின் எண்ணற்ற மருத்துவ குணங்கள்!

தினந்தோறும் நாம்  வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சீரகம் அதிக மருத்துவ குணங்கள் கொண்டதாம்..

சீரகம்  மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும். அதாவது சீர் + அகம் = சீரகம் –  என்பதன்  அர்த்தம்  வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:-

சிறிது  சீரகத்தை,  மஞ்சள் வாழைப் பழத்துடன், சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

சீரகம் சிறிதளவு மென்று தின்றுவிட்டு  ஒரு டம்ளர் மிதமான குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்ப்படும் வாந்தியைக் கட்டுப்படுத்த  எலுமிச்சம்பழச் சாறுடன் சீரககுடிநீரை சேர்த்துக் குடித்து வரலாம்.

ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் தயார்  செய்து, குடித்தால்  அதிக பேதி போக்கு நிற்கும்.

சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதே அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் பெருகும்.

வாயுத் தொல்லை இருப்பின்  மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் சரியாகிவிடும்.

நரம்புகள் வலுப்பெற,  நரம்புத் தளர்ச்சி குணமாக சீரகத்தை லேசாக வறுத்து, அதனுடன்  கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர சீராகும்,உடல் வலிமைபெறும்.

சீரகத்துடன், மூன்று அல்லது நான்கு பற்கள் பூண்டு சேர்த்து மைய்யாக  அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடியாக்கி  தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாக வறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வந்தால் பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்சு எரிச்சல் தீரும்.

சீரகம் மற்றும்  சின்னவெங்காயம் இரண்டையும் லேசாக நெய்விட்டு வதக்கி தயார் செய்து சாப்பிட்டால் உதட்டுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் சீரகத்தை  கலந்து ஒருநாள் ஊறவைத்துக் பின்பு  அதை, தினம் இரண்டு வேளை என்ற வீதம் 3 நாட்கள் சாப்பிட்டு வர, உடலில் உள்ள பித்தம்  குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்து  சுத்தமான தேனில் கலந்து சாப்பிட்டால்  உடல் உள் உறுப்புகள்  எல்லா சீராக இயங்கும் மேலும் உடல் கோளாறு ஏற்படாமல் தடுக்கும்.

வயிற்றுக்கு நல்ல  மருந்தாக ஓமம், சீரகம் கலவை அமையும்.

தினமும் நாம் பருகும் நீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து  நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தஒரு விதமான அஜீரணக் கோளாறுகளும் வராது . மேலும் நீர்மூலம் பரவும் தொற்று  நோய்களைத் தடுப்பதோடு  நமது பசியைத் தூண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *