இந்தியாவின் “பிரதமர் வாஜ்பாய்” – அடடே இது தெரியாம போச்சே…!!

பிரதமர் வாஜ்பாயை அழைக்க முதல்வர் எடப்பாடி டெல்லி செல்ல உள்ளதாக கூறி அமைச்சர் பாஸ்கரன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சிவகங்கையில் நடந்த அதிமுக கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார்.

அப்போது அவர் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் வாஜ்பாயை அழைக்க முதல்வர் எடப்பாடி டெல்லி செல்ல உள்ளதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். வாஜ்பாய் மறைந்துவிட்டார் என்பதை கூட தெரியாமல் பாஸ்கரன் பேசியதை கேட்ட கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *